மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சலார் திரைப்படம்?.. வெளியான தகவல்.!

மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படும் சலார் திரைப்படம்?.. வெளியான தகவல்.!



Prabhas in salar movie again postponed

கே ஜி எஃப் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் பிரசாந்த் நீல். தற்போது இவர் நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

kgf

இந்த திரைப்படத்தை கே ஜி எஃப் படத்தை தயாரித்த விஜய் கிரகந்தர் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், ரிலீசுக்கு தயாராகி வருகிறது. 

இந்தத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே பலமுறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், கடைசியாக டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் சலார் படத்தை ஒத்தி வைக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

kgf

அதற்கு காரணம் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள டங்கி திரைப்படம் அதே நாளில் வெளியாக உள்ளதால், சலாம் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு படைக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் சலார் படத்தை தயாரித்து வரும் நிறுவனம் அதனை மறுத்துள்ளது.