சினிமா

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் பவர்ஸ்டார்! ஏன்? அவருக்கு என்னாச்சு! பேரதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!!

Summary:

மருத்துவமனையில் நடிகர் பவர்ஸ்டார்! ஏன்? அவருக்கு என்னாச்சு! பேரதிர்ச்சியை ஏற்படுத்திய புகைப்படம்!!

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டு விளங்குபவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் தற்போது நடிகை வனிதாவுடன் இணைந்து பிக்கப் டிராப் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இப்படத்தின் விளம்பரத்திற்காக இருவரும் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது பவர் ஸ்டார் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் அவரது உடல்நலத்திற்கு என்ன பிரச்சினை? எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும் கடந்த செப்டம்பர் மாதம் உயர் ரத்தழுத்தம் காரணமாக பவர் ஸ்டார் மயங்கி விழுந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இது அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனாலும் பவர்ஸ்டார் உடல்நலம் குணமடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Advertisement