ஊரடங்கை மீறி ஊர் சுற்றியதால் கைது செய்யப்பட்டாரா பிரபல நடிகை! சர்ச்சைக்கு மத்தியில் அவரே வெளியிட்ட வீடியோ!
பாலிவுட் சினிமாவில் நாஷா, எ ஜர்னி ஆஃப் கர்மா போன்ற படங்களில் நடித்தவர் நடிகை பூனம் பாண்டே. இவர் சமூகவலைதளங்களில் எடக்குமடக்கான கேள்விகளை எழுப்புவது, கவர்ச்சி படங்களை வெளியிடுவது என சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். மேலும் இவர் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என கூறி பெரும் சர்ச்சையை கிளப்பியவர்.
இந்நிலையில் நேற்று நடிகை பூனம் பாண்டே ஊரடங்கை மீறி தனது ஆண் நண்பர் ஷாம் அகமது என்பவருடன் மும்பை மெரைன் டிரைவ் சாலையில் காரில் சுற்றியதாவும், எவ்வித காரணமும் இல்லாமல், அனுமதியும் பெறாமல் சுற்றிய அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, எச்சரிக்கை செய்து விடுவித்ததாகவும் தகவல் வெளியானது. இதனால் பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு கிளம்பியது.
இந்நிலையில் இதுகுறித்து நடிகை பூனம் பாண்டே விளக்கமளித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மும்பையில் நான் கைது செய்யப்பட்டதாக பரவிவரும் தகவல் தவறானது. நான் வீட்டில் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் இருக்கிறேன். என்னை யாரும் கைது செய்யவில்லை. மேலும் ஊரடங்கு உத்தரவை தான் மதிக்கிறேன். இந்த நேரத்தில் எந்த காரணத்திற்காகவும் நான் வெளியே செல்ல மாட்டேன். மேலும் நான் நேற்று 3 திரைப்படங்கள் பார்த்தேன் எனவும் அவர் கூறியுள்ளார்.