அம்மாடியோவ்.. பீஸ்ட் படத்திற்காக பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் இவ்வளவா! அம்மணி வேற லெவல்தான்!!

அம்மாடியோவ்.. பீஸ்ட் படத்திற்காக பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம் இவ்வளவா! அம்மணி வேற லெவல்தான்!!


Pooja hegde salary in beast movie

தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனைத் தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரியளவில் படவாய்ப்புகள் வரவில்லை. ஆனால் அவர் தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

மேலும் அவரது கைவசம் தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம், சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா போன்ற பல படங்கள் உள்ளன. மேலும் நடிகர் விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து அவர் பல தமிழ் படங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.

beast

பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, நெல்சன் இயக்கியுள்ளார். இந்த நிலையில் பீஸ்ட் படத்திற்காக அவர் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டேக்கு ரூ.3.5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தெலுங்கில் இவர் 2 கோடி சம்பளம் பெற்று வந்தாராம்.