1 இல்ல 2 இல்ல.. தளபதி 65 படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.? இவ்வளவு சம்பளம் கொடுக்க இதுதான் காரணமா?

1 இல்ல 2 இல்ல.. தளபதி 65 படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு எத்தனை கோடி சம்பளம் தெரியுமா.? இவ்வளவு சம்பளம் கொடுக்க இதுதான் காரணமா?


pooja-hegde-salary-for-thalapathy-65-movie

தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் பூஜா ஹெக்டேவின் சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது வைரலாகிவருகிறது.

மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. படத்திற்கு அனிருத் இசை அமைக்க உள்ளார். இந்நிலையில் படத்திற்கான பூஜை சன் டிவி ஸ்டுடியோவில் இன்று நடந்தது. பூஜையில் விஜய் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டார்.

Pooja hegde

ஆனால் படத்தின் நாயாகியாக, விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கும் நடிகை பூஜா ஹெக்டே ஒருசில காரணங்களால படத்தின் பூஜையில் கலந்துகொள்ளவில்லை. ஏற்கனவே இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாகி அறிமுகமாகி, இன்று தெலுங்கு சினிமாவில் டாப் நாயகிகளில் ஒருவராக இருக்கும் பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pooja hegde

அதேநேரம் தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு பேசப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல்களும் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டேவுக்கு 3.5 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாம். தெலுங்கு திரையுலகில் அவர் மிகவும் பிரபலம் என்பதாலும், ஷூட்டிங் தேதி நெருங்கிவிட்டதாலும் தான் பூஜா கேட்ட தொகையை கொடுக்க படக்குழு சம்மதித்தார்கள் என்றும் கூறப்படுகிறது.