குடும்ப குத்துவிளக்காக மாறிய பூஜா ஹெக்டே.. வைரலாகும் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் 'முகமூடி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படமே பெரிதளவு வெற்றி பெறவில்லை.
தொடர்ந்து தமிழில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்த பூஜா ஹெக்டே, விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படத்திலும் இவர் நடிப்பு பெரிதும் பேசப்படவில்லை. இதனால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்தது.
இதனால் தமிழில் இருந்து தெலுங்கு மொழி சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறார் பூஜா ஹெக்டே. மேலும் பட வாய்ப்புக்காக பல்வேறு போட்டோசூட்களை செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
அவ்வாறு இவர் சமீபத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது. அப்பதிவில் கவர்ச்சியாக சேலையணிந்து புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் ஆச்சர்யத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.