9 ஆண்டுகளுக்கு பிறகு டாப் நாயகியை தமிழுக்கு மீண்டும் பார்சல் பண்ணிட்டுவந்த படக்குழு.. உற்சாகத்தில் ரசிகர்கள்..Pooja hegde acting in Thalapathi 65 movie official announcement

தளபதி 65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது உறுதி செய்யப்பட்டுளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மாஸ்டர் படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கிறார் தளபதி விஜய். தளபதி 65 படம் துப்பாக்கி படம் போன்றும், சற்று நகைச்சுவை கலந்த படமாக இருக்கும் என செய்திகள் வெளியாகிவரும்நிலையில், தற்போதில் இருந்தே ரசிகர்கள் படம் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

Thalapathi 65

இந்நிலையில் தளபதி 65 படத்தில் அவருக்கு ஜோடியாக யார் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரகசியமாக இருந்துவந்தநிலையில், தற்போது நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக இருந்துவரும் பூஜா ஹெக்டே கடைசியாக தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில், ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் நடித்திருந்தார்.

தற்போது 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்க வரும் இவருக்கு ரசிகர்கள் தங்கள் வரவேற்பை தெரிவித்துள்ளனர்.