என்னை பொருத்தவரை விஜய் இப்படிதான்... நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட பரபரப்பு கருத்து...Pooja hedge speak about Vijay

தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமுடி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. அதனையடுத்து தமிழில் படவாய்ப்புகள் வராததால் தெலுங்கு பக்கம் சென்றார். தெலுங்கு, கன்னட, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகர்களுள் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது நெல்சன் இயக்கத்தில் விஜயுடன் சேர்ந்து பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் அரபிக்குத்து பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பீஸ்ட் படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Pooja Hedge

தற்போது பீஸ்ட் படத்தில் விஜயுடன் நடித்த அனுபவம் பற்றி கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் என கூறினார் பூஜா ஹெக்டே. மேலும் இதுவரை நான் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். ஆனால் விஜய்யை போன்று ஒரு நடிகரை நான் பார்த்ததில்லை. அவரின் கடின உழைப்பு என்னை வியக்கச்செய்தது. இந்த கடின உழைப்பால் தான் அவர் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார்.