சினிமா

பிரபல நடிகர் கருணாகரன் மீது காவல் நிலையத்தில் புகார்! இதுதான் காரணமா?

Summary:

Police complaint against to actor karunakaran

காமெடி நடிகர் கருணாகரனுடன் இன்னும் சில புதுமுகங்கள் நடித்திருக்கும் படம் ‘பொதுநலன் கருதி’. கந்து வட்டியின் கொடுமை குறித்து விலாவாரியாகப் பேசும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு கடந்த வாரம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது.

ஆடியோ வெளியீடு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் நடிகர் கருணாகரன் படத்தில் நடிப்பதற்காகவும், படத்தின் ப்ரமோஷனுக்காகவும் சேர்த்து 25 லட்சம் வாங்கியதாவும் ஆனால் பட ப்ரோமோஷனுக்கு வர மறுத்ததாகவும் கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த கருணாகரன் சில அடியாட்கள் மூலம் இயக்குநர் சீயோனையும், இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்தையும்  கடுமையான வார்த்தைகளால் மிரட்டியதாகத் தெரிகிறது.

இதை ஒட்டி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் குழுவினருடன் சற்றுமுன்னர் சென்னை போலிஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சீயோன் கந்து வட்டிப் பார்ட்டிகளின் துணைகொண்டு கருணாகரன் தனக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் கொடுத்தார்.


Advertisement