சினிமா

பிறந்தநாள் கேக்கை வாளால் வெட்டிய பிரபல முன்னணி நடிகர்! பின் நேர்ந்த விபரீதம்!

Summary:

Police arrest thuniya vijay for cutting cake in sword

கன்னட திரையுலகில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது  முன்னணி நடிகராக இருப்பவர் துனியா விஜய். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் வந்துள்ளது.அதனை முன்னிட்டு நள்ளிரவில் பெங்களூரு கிரிநகரில் உள்ள தனது வீட்டில் அவர் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். மேலும் அதில் குடும்பத்தினர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். 

அந்த விழாவில் நடிகர் துனியா விஜய் நீண்ட வாள் மூலம் தனது பிறந்தநாள் கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவர் அனுமதி பெறாமல் தனது  வீட்டின் முன்பாக பந்தல் போட்டிருந்தார், அது அப்பகுதி மக்களுக்கு பெரும் இடையூறாக இருப்பதாக காவல் நிலையத்தில் புகாரும்  அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  நடிகர் துனியா விஜய்யை விளக்கம் அளிக்குமாறுகோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அவரும் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார் 

 


Advertisement