கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா? மஹத்தின் காதலி வெளியிட்ட வீடியோவால் ஷாக் ஆன ரசிகர்கள்.!

கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியா? மஹத்தின் காதலி வெளியிட்ட வீடியோவால் ஷாக் ஆன ரசிகர்கள்.!


pirachi-attack-mahat-video-post

தமிழ் சினிமாவில் ஜில்லா படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்து பிரபலமானவர் நடிகர் மகத். சிம்புவின் நண்பரான இவர் வல்லவன், காளை , மங்காத்தா போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து மகத் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவர் ஏற்கனவே பிராச்சி என்பவரை காதலித்து வந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் யாஷிகா உடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.

   mahat

பின்னர் தனது எல்லைமீறிய கோபத்தால் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மஹத் தனது காதலி பிராச்சியுடன் இணைந்தார்.

இந்நிலையில் பிராச்சி, மஹத் தன்னிடம் அடி வாங்கி ரத்த காயங்களுடன் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  வெளியிட்டார். ஆனால் இறுதியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்த உருவாக்கபட்ட செட்டப் என தெரியவந்தது. இதனை கண்ட ரசிகர்கள் அழகான ஜோடி என பதிவிட்டு வருகின்றனர்.