சினிமா

ப்ளீஸ் உதவுங்க..கெஞ்சி தவித்த கோ பட நடிகை! அடுத்த சில மணிநேரங்களில் வெளியிட்ட நொறுங்கவைக்கும் ஷாக் தகவல்!

Summary:

தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தில் நடித்தத

தமிழ் சினிமாவில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளிவந்த பொய் சொல்ல போறோம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதனை தொடர்ந்து அவர் அஜித்தின் ஏகன், கோவா, கே.வி.ஆனந்தின் கோ போன்ற படங்களில் நடித்து பெருமளவில் பிரபலமானார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ஏராளமான படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்று காலை முதல் தன் ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சகோதரருக்கு உதவிகேட்டு, உத்திர பிரதேசத்தில் உள்ள ஃபருக்தாபாத்தில் உள்ள கயாம்கன்ஜ் பிளாக்கில் வெண்டிலேட்டருடன் கூடிய படுக்கை வசதி வேண்டுமென்று கெஞ்சி கோரிக்கை வைத்து வந்தார்.

ஆனால் அவருக்கு எந்த மருத்துவ உதவியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில் பியா பாஜ்பாய் தனது சகோதரன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Advertisement