தமிழகம் சினிமா

பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு; தலயுடன் மோதலா..? எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தேதி முடிவுகள்.!

Summary:

petta - visuvasam same relese date

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பேட்ட படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ள நிலையில், தல நடிக்கும் விசுவாசம் படத்திற்கு போட்டியாக வருமோ என்று ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்ட. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பிரமாண்டமான பொருட்செலவில் தயாரித்து வரும் நிலையில் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்திற்கு கூடுதல் சிறப்பு என்னவென்றால், இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக், குரு சோமசுந்தரம், சனந்த் ரெட்டி, மகேந்திரன், மேகா ஆகாஷ், சசிக்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர். 

Image result for rajini and ajith

ஊட்டியை கதைக்களமாக கொண்டு உருவாகிக் கொண்டிருக்கும் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஐரோப்பா, டார்ஜிலிங், டேராடூன், லடாக், சென்னை போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்சமயம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பேட்ட’ படத்தை பொங்கல் பண்டிகையின் விடுமுறையை முன்னிட்டு வரும் ஜன.10ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தல அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக இருப்பது  குறிப்பிடத்தக்கது. 


 


Advertisement