தமிழகம் சினிமா

பிகில் பட சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு தயாரிப்பு நிறுவனம் கடிதம்!

Summary:

permission for bikil movie special show

அட்லி இயக்கத்தில் தெறி , மெர்சலையடுத்து தொடர்ந்து 3வது முறையாக விஜய் – அட்லி இருவரும் "பிகில்" படத்தில் இணைந்துள்ளனர் . இந்தப்படத்தை ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதுடன் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்தநிலையில் இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நாளை மறுநாள் 25 ஆம் தேதி பிகில் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு அறிவிக்கப்பட்ட நிலையில், உற்சாகத்தில் குஷியுடன் இருந்தனர். அதிக கட்டண வசூல் புகார் வருவதாக பிகில் படம் உட்பட எந்த படத்திற்கு பண்டிகைக்கால சிறப்பு காட்சி ரத்து என அமைச்சர் கடம்பூர் ராஜு, மற்றும் அமைச்சர் ஜெயக்குமார்  இருவரும் தெரிவித்தனர். 

பிகில் உட்பட தீபாவளி  சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக கட்டணம் வசூல் செய்வதால் பொதுமக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் பிகில் உட்பட திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை என அமைச்சர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில், நடிகர் விஜயின் பிகில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு அனுமதி தரவேண்டும் எனக்கோரி தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. 


Advertisement