30 நாட்கள் கொரோனா வார்டில் பணிபுரிந்துவிட்டு வீட்டிற்கு சென்ற இளம் பெண் மருத்துவர்..! வீட்டு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி.! கண்ணீர் சிந்தி கலங்கிய சம்பவம்.!
கொரோனா வார்டில் பணிபுரிந்து வீடு திரும்பிய இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு அவர் தங்கியிருக்கும் குடியிருப்பு பகுதியில் மக்கள் அனைவரும் தங்கள் வீடுங்களில் இருந்து கைத்தட்டி வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அணைத்து நாட்டுக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த மிகப்பெரிய போரில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் அனைவரும் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா வைரஸை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா வார்டில் பணிக்கு சென்று 30 நாட்கள் கழித்து வீட்டிற்கு திரும்பிய ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருக்கு அவரது பிளாட்டில் இருக்கும் அனைவரும் ஓன்று சேர்ந்து அவருக்கு உற்சாகமாக வாசலில் இருந்து கைதட்டி வரவேற்கின்றனர்.
இதைத் துளியும் எதிர்பார்க்காத அந்த மருத்துவர் கண்ணீர் விடுகிறார். குறித்த அந்தக்காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.