சினிமா

இப்போ நான் யார் என தெரியும் ..செம கெத்தாக பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!

Summary:

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர்

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஜூலி. அதில் கிடைத்த பெருமையால் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்பத்தில் அவரை ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் நாளடைவில் பிக்பாஸ் வீட்டிற்குள் அவரது சில மோசமான நடவடிக்கைகளால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதிக்க ஆரம்பித்தார்.

அன்றிலிருந்து இன்றுவரை ரசிகர்கள் அவர் என்ன செய்தாலும் மோசமாக விமர்சித்து வருகின்றனர். ஆனாலும் அதனை சிறிதும் பொருட்படுத்தாத ஜூலி தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என பிஸியாக உள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வபோது வித்தியாசமான போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். 

அதுமட்டுமின்றி ஜூலி தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவ்வாறு அடுத்தடுத்து பிசியாக இருந்துவரும் அவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில்,வரலாறு வெளியேறுபவர்களைப் பற்றி பேசாது. இப்போது நான் யார் என்று உங்களுக்குத் தெரியும் என்று பதிவிட்டுள்ளார். இதற்கும்  நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.


 


Advertisement