சினிமா

தனுஷ் பட கியூட் நடிகைக்கு கல்யாணம்! மாப்பிள்ளை இவர்தானா? செம ஜோடில..வைரலாகும் புகைப்படம்!!

Summary:

தமிழ் சினிமாவில் நெஞ்சம் துணிவிருந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவ

தமிழ் சினிமாவில் நெஞ்சம் துணிவிருந்தால் என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரின் பிர்சாதா. அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா, தனுஷின் பட்டாஸ் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகை மெஹ்ரின் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி என அனைத்து மொழி படங்களிலும் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். 

இந்த நிலையில் நடிகை மெஹ்ரீனுக்கு பாவ்யா பிஷ்னோய் என்பவருடன் திருமணம் செய்ய பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாவ்யா பிஷ்னோய்யின் தந்தை குல்தீப் பிஷ்னோய் ஹரியானா மாநிலத்தின் அதம்பூர் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவாக உள்ளார். மேலும் பாவ்யா பிஷ்னோயும் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறாராம்.

இந்த நிலையில் மெஹ்ரீன் மற்றும் பாவ்யா பிஷ்னோய் இருவருக்கும் நேற்று ஜெய்ப்பூரில் உள்ள கோட்டையில் திருமண நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடைபெற்றுள்ளது. ஆனால் திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இந்த நிலையில் அவர்களது நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பலரும் அந்த ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Advertisement