கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
ஆபாசமாக ரசிகர் கேட்ட கேள்வி! செம கூலாக தனது ஸ்டைலில் பதிலடி கொடுத்த அஜித் பட நடிகை!

2012ம் ஆண்டு பாப்பின்சு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து அவர் அடுத்துத்து பல மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பிரபலமடையவில்லை.
அதனைத் தொடர்ந்து பார்வதி நாயர் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் உத்தமவில்லன், மாலைநேரத்து மயக்கம், எங்கிட்ட மோதாதே என பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு தமிழில் சரியான பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. ஆனால் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அவர் பிசியாக உள்ளார்.
இந்த நிலையில் பார்வதி நாயர் சமீபத்தில் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடம் உரையாடியபோது நெட்டிசன் ஒருவர் உங்களுடைய சைஸ் என்ன? என கேட்டுள்ளார். அதற்கு அவர் எனது ஷூ சைஸ் 37 என்றும் டிரஸ் சைஸ் எஸ் என்றும் கூலாக பதிலடி கொடுத்துள்ளார். இதேபோன்று பல மோசமான கேள்விகளுக்கும் அவர் கூலாக தனது பாணியில் பதிலளித்துள்ளார்.