சினிமா

சிறப்பாக நடந்த பார்த்திபன், சீதா மகள் திருமணம்! அழகிய புகைப்படங்கள்!

Summary:

Parthipan seetha daughter marriage photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பார்த்திபன். வடிவேலுவுடன் இணைந்து இவர் செய்யும் லொள்ளு தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலம். நடிகர் மட்டும் இல்லாது இவர் ஒரு இயக்குனரும் கூட. சினிமாவில் ஜொலித்த இவர் சக நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கும் இரு மகள்கள் இருக்கிறார்கள்.

இவர்களது இளைய மகள் கீர்த்தனாவுக்கு கடந்த வருடம் தான் திருமணம் நடந்து முடிந்தது. தற்போது பார்த்திபன் சீதா தம்பதியினரின் முதல் மகள் அபிநயாவுக்கு நேற்று திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது. சென்னை அடையாறு லீலா மகாலில் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

இந்த திருமணத்தில் ராதா ரவி, லதா ரஜினிகாந்த், ஆர்.பி.சௌத்ரி, இயக்குனர் சந்திரசேகர், பாக்யராஜ், சாந்தனு, சிவக்குமார், கார்த்தி, ராதிகா, நிரோஷா என பல பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். விமர்சையாக நடந்த சீதா – பார்த்திபனின் மூத்த மகள் திருமணம். புகைப்படம் இதோ பாருங்கள்.


Advertisement