ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆனது? வெளியானது மருத்துவ அறிக்கை.. வீடு திரும்பினார்.!
பல நடிகைகளின் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பிரபல நடிகர்! அதிலிருந்து தப்பியது திரிஷா மற்றும் நயன்தாரா தான்!!

தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வருபவர் நடிகை திரிஷா. நீண்ட நாட்களுக்குப் பின் த்ரிஷா நடித்து சமீபத்தில் வெளிவந்த 96 படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடித் தந்தது.
பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தின் 100 வது நாள் விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் கலந்துகொண்டார்.
அப்போது பார்த்திபன் மேடையில் 96 படக்குழுவை வாழ்த்தி பேசினார். நடிகர் பார்த்திபன் எப்பொழுதுமே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அவர் சிரித்த முகத்துடன் பல நடிகைகளை தன் படங்களில் நடிக்க வைத்து அவர்களின் வாழ்க்கையை கெடுக்க நினைத்தேன் அதில் தப்பித்துக்கொண்டது திரிஷாவும், நயன்தாராவும் தான் என நகைச்சுவையாக பேசினார்.