நெற்றியில் காயத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட பார்த்திபன்.. என்ன நடந்தது.! ரசிகர்கள் அதிர்ச்சி.?

நெற்றியில் காயத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட பார்த்திபன்.. என்ன நடந்தது.! ரசிகர்கள் அதிர்ச்சி.?


Parthiban instagram post viral

தமிழ் திரை துறையில் இயக்குனராகவும், நடிகராகவும் பிரபலமானவர் பார்த்திபன். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து இயக்குவதில் பெருமை பெற்றவர் பார்த்திபன்.

parthiban

மேலும் சில வருடங்களாக நடிப்பின் மீது ஆர்வம் காட்டி வரும் பார்த்திபன் தமிழில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பு திறமையை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இயக்குனராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.

சமீபத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரின்  நடிப்பு பெரிதும் பேசப்பட்டு வந்தது.

இதனை அடுத்து தற்போது இவர் ஒரு காதல் கதையை வைத்து திரைப்படம் இயக்கவுள்ளார். இமான் இசையமைக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார் பார்த்திபன். மேலும் அப்புகைப்படத்தில் அவரது நெற்றியில் காயம் இருந்ததை கவனித்து ரசிகர்கள் கேள்வி கேட்டு வந்தனர்.

parthiban

இதற்கு பதிலளித்த பார்த்திபன், ஸ்ருதிஹாசன் மற்றும் பூங்கொத்தையும் மீறி என்னை கவனித்ததற்கு நன்றி. நெற்றியில் இருந்த மருவை சிறிய ஆப்ரேசன் செய்து நீக்கியிருந்தேன். அந்த காயம் தான் இது என்று கூறியிருக்கிறார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.