சினிமா

ஏ.ஆர்.ரஹ்மானுக்கே நோ சொன்ன பரவை முன்னியம்மா..! இந்த ரகசியம் தெரியுமா உங்களுக்கு.?

Summary:

Paravai muniyamma say no to AR Rahman music

தமிழ் சினிமாவில் பிரபலமான கிராமிய பாடகிகளில் ஒருவரான பரவை முனியம்மா உடல்நிலை மோசமான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிர் இழந்தார். இவர் இறந்த பிறகு இவர் பற்றிய ஒரு தகவல் வைரலாகிவருகிறது.

மதுரை மாவட்டம் பரவை என்னும் கிராமம்தான் இவரது சொந்த ஊர். தனது ஊர் பெயரை தனது பெயருக்கு முன்னாள் சேர்த்து பரவை முனியம்மா என வைத்துக்கொண்டார். இவர் இறக்கும்போது வயது 83. சினிமாவில் பாடுவதற்கு முன்பே பல்வேறு கச்சேரிகள், ஊர் திருவிழாக்கள் பாடிவந்துள்ளார் பரவை முனியம்மா.

அதுமட்டும் இல்லாமல் வானொலி நிகழ்ச்சிகள், வெளிநாட்டு கச்சேரிகளிலும் பாடி வந்துள்ளார். சுமார் 20 வருடங்கள் பாடல் துறையில் இருந்த பிறகே தூள் படத்தில் இவருக்கு முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், தூள் படத்திற்கு முன்பே AR ரஹ்மான் இசையில், ரஜினியின் படத்தில் பரவை முனியம்மா பாடுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆம், சூப்பர்ஸ்டார் நடித்த 'கொக்கு சைவ கொக்கு' பாடலை பாடுவதற்கு AR ரஹ்மான் முதலில் பரவை முனியம்மாவைதான் அணுகியுள்ளார். ஆனால், AR ரஹ்மான் தன்னை தேடும் விஷயம் பரவை முனியம்மாவுக்கு தெரியாமல் இருக்க, இந்த விஷயம் அவர் காதுக்கு போகும் முன்னரே, அவர் உடன் இருந்தவர்கள் அதெல்லாம் முடியாது என கூறியுள்ளனர்.

இந்த தகவல் தீயாய் பரவ, "ரஹ்மானுக்கு நோ சொன்ன பாடகி" என்று பத்திரிகைகளில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் பாட்டிக்கே இந்த விஷயம் தெரிய வந்ததாம். ஆஹா!, அருமையான வாய்ப்பு போச்சே என வருத்தப்பட்ட பாட்டி, ஒருமுறை AR ரஹ்மானை பார்க்க வேண்டும் என்று ஆசைபட்டாராம், ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லாமலே போய் விட்டது.


Advertisement