அட! தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸிலும் இந்த நடிகை தான் நடிக்கிறாங்களா? உற்சாகத்தில் ரசிகர்கள்.

அட! தெலுங்கு பாண்டியன் ஸ்டோர்ஸிலும் இந்த நடிகை தான் நடிக்கிறாங்களா? உற்சாகத்தில் ரசிகர்கள்.



pandiyan-stores-thelungu-version

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கூட்டு குடும்பத்தை மையமாக கொண்ட இந்த தொடரில் நாயகியாக சுஜிதா தனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

மேலும், சின்னத்திரை நடிகையும், தொகுப்பாளினியுமான சித்ரா முல்லை என்ற கதாபாத்திரத்திலும், ஜீவா, கதிர், மீனா, மூர்த்தி என பல்வேறு நடிகர் நடிகைகள் இந்த தொடரில் நடித்துவருகின்றனர். தமிழ் ரசிகர்களிடையே இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு இருப்பதை அடுத்து தற்போது இந்த தொடர் தெலுங்கிலும் தொடங்க உள்ளது.

ஸ்டார் மா தொலைக்காட்சியில் வண்டிமா என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. இந்த தொடரிலும் அண்ணி கதாபாத்திரத்தில் நடிகை சுஜிதாவே நடிக்க உள்ளார். சீதா என்ற கதாபாத்திரத்தில் சுஜிதா நடிக்கிறார்.

Pandiyan stores

Pandiyan stores