சினிமா வீடியோ

பாண்டியன் ஸ்டோர் சித்ராவிற்கு விஜய் டிவி கொடுத்த ஸ்பெஷல் சர்ப்ரைஸ்! குஷியான காதல் ஜோடி! வைரலாகும் வீடியோ!

Summary:

பாண்டியன் ஸ்டோர் சித்ராவின் திருமண கொண்டாட்டங்களை விஜய் டிவி அரங்கேற்றியுள்ளது. அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சியில்   தொகுப்பாளினியாக இருந்து மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் சித்ரா. அதனை தொடர்ந்து அவர் சில சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் நடன ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை சித்ரா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர் தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

இந்த தொடரில் நடித்ததற்கு பிறகு இவருக்கென ஏராளமான ரசிகர்கள்  பட்டாளமே உருவாகியுள்ளது. மேலும் கதிர் மற்றும் முல்லை ஜோடிக்காகவே அந்த சீரியல் பார்ப்பவர்களும் உண்டு. இந்த  நிலையில் சித்ராவிற்கு கடந்த மாதம் ஹேமந்த் என்பவருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கிராமத்து கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் நடிகை சித்ராவிற்கும் அவரது வருங்கால கணவர் ஹேமந்த்திற்கும் மீண்டும் நிச்சயதார்த்தம் மற்றும் நலங்குவிழா  கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. இதனால்  காதல் ஜோடிகள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்த ப்ரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

 

 


Advertisement