புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட்ராசக்க.. ரூ.3000 லாபத்துடன் சவாலில் ஜெயித்த கதிர்.. ஆரவாரத்தில் ரசிகர்கள்..! வைரலாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ..!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் அண்ணன் தம்பிகளின் பாசக்கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகும் நெடுந்தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இத்தொடரில் கதிர் தனது வீட்டிலிருந்து வெளியேறி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்.
அதில் முக்கியமாக இவர்கள் பாண்டியன் மெஸ் தொடங்கிய நிலையில், முல்லையின் அக்கா மனதை புண்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார். மேலும் ஒரு மாதத்திற்குள் உங்களால் முடிந்தால் ஒரு ரூபாயாவது லாபம் எடுத்துக்காட்டுங்கள் என்று சவால் விடவே, சவாலை ஏற்ற கதிர் அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சமீபத்தில் கூட எது சாப்பிட்டாலும், எவ்வளவு சாப்பிட்டாலும் ரூ.50 என்ற பலகையை வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வார ப்ரோமோவில் "கதிர் தனது மொத்த உழைப்பையும் வைத்து உருவாக்கிய பாண்டியன் மெஸ்ஸில், பிரியாணி இலவசம் என்றும், அருகில் ஒரு உண்டியல் டப்பாவை வைத்து உங்களுக்கு எவ்வளவு விருப்பமோ அந்த காசை இதில் போடுங்கள் என்று கூறுகிறார்.
இதனால் கூட்டம் அலைமோதவே அனைவரும் சாப்பிட்டு முடித்து சென்றபின், கோபமுற்ற முல்லையின் தாய் மற்றும் அக்கா அந்த உண்டியலை கீழே போட்டு உடைக்கிறார்கள். அப்பொழுது அதிலிருந்து பணமழை கொட்டுவது போல முழுவதும் சிதறி விழுகிறது. ஒரு ரூபாய் கூட லாபம் எடுக்க முடியாது என்று கூறியிருந்த நிலையில், ரூ.18,000 லாபம் எடுத்தனர். கதிரின் மாமா, நீங்க ஜெயிச்சிட்டிங்க மாப்ள" என்று கூறுவதோடு ப்ரோமோ முடிவடைகிறது.