"தனுஷ், ஜெயம் ரவி அளவிற்கு அழகு இல்லை" என்று சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்..

"தனுஷ், ஜெயம் ரவி அளவிற்கு அழகு இல்லை" என்று சர்ச்சையை கிளப்பிய பிரபல இயக்குனர்..


Pakkathavan movie director interview

கோலிவுட் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்பவர் ஜெயம் ரவி. ஆனால் இவர் 20 ஆண்டுகளில் 30 இருக்கும் குறைவான திரைப்படங்களிலேயே நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பொன்னியின் செல்வன்' முதல் மற்றும் இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

jeyam ravi

இதுபோன்ற நிலையில் மாப்பிள்ளை, படிக்காதவன் போன்ற தனுஷ் பட இயக்குனரான சுராஜ் சமீபத்தில் தனுஷ் பற்றி சர்ச்சையாக பேட்டியில் பேசியிருப்பது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் 'மாப்பிள்ளை' திரைப்படத்தின் கதையை தனுஷிடம் கூறியவுடன் உ ஓகே சொல்லி படப்பிடிப்பு ஆரம்பம் ஆகிவிட்டது.

இதைப்போல் 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தின் கதையையும் முதலில் தனுஷிடமே கூறினேன். ஆனால் தனுஷிற்கு கால் சீட்டு இல்லாத காரணத்தினால் இதன்பின் ஜெயம்ரவுயிடம் இக்கதையை கூறி அவர் ஓகே சொல்லி படப்பிடிப்பு நடந்தது.

jeyam ravi

சகலகலா வல்லவன் திரைப்படம் திரையரங்கில் வெளியான பிறகு தான் தெரியும் இப்படம் வெற்றி அடையாததற்கு காரணம் ஜெயம் ரவி தான் என்று. இப்படத்தில் கதாநாயகிக்கு பிடிக்காமல் கதாநாயகனாக ஜெயம் ரவியை திருமணம் செய்ய வேண்டும் என்பதே படத்தின் கதையாகும். ஆனால் ஜெயம் ரவி போன்ற அழகான ஒருவரை எப்படி பிடிக்காமல் இருக்கும் என்று ரசிகர்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் தனுஷை படத்தில் கதாநாயகனாக நடிக்க வைத்திருந்தால் வெற்றி அடைந்திருக்கும் என்று சர்ச்சையாக பேசியுள்ளார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.