ஏன் இப்படி?? என் மகள் இப்படி கஷ்டப்பட்டதே இல்லை.. பாக்கியலட்சுமி இனியா ரியல் அம்மா வேதனை!!



pakiyalakshmi-iniya-real-mom-worry-about-troll-her-danc

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த தொடர் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி தொடரில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேஹா நடித்து வருகிறார். தொடரில் டான்ஸ் போட்டி நடைபெற்றது.

விமர்சனத்திற்குள்ளான இனியா டான்ஸ் 

 

அதில் இனியா பங்கேற்று நடனமாடி இருப்பார். அதில் அவர் பரதநாட்டியம் டிரஸ் போட்டுக் கொண்டு புஷ்பா படத்தின் பீலிங்ஸ் பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பார். அந்த வீடியோ திடீரென இணையத்தில் வைரலாகி மீம்ஸ், ட்ரோலுக்கு உள்ளானது. இனியாவின் நடனத்தை பலரும் கலாய்த்து கமெண்ட் செய்திருந்தனர்.

இதையும் படிங்க: ரீல் ஜோடி இப்போ ரியல் ஜோடி ஆகியாச்சு.. பிரபல நடிகையுடனான காதலை போட்டுடைத்த விஜய் டிவி நடிகர்!!

வேதனையில் ரியல் அம்மா 

 

இந்த நிலையில் இதுகுறித்து பேட்டி ஒன்றில் நேஹாவின் அம்மா கூறியதாவது, குழந்தையிலிருந்து என் மகள் நடித்து கொண்டிருக்கிறாள். அவள் சீரியல் காட்சியில் நடித்துவிட்டு வந்து இவ்வளவு பீல் பண்ணி நான் பார்த்ததே இல்லை. சமூக ஊடகங்களில் பேச வேறு விஷயமே இல்லையா?ஒரு சீனுக்கு இப்படி நேரம் செலவழித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். கலாய்க்கிறோம் என்ற பெயரில் எல்லை மீறி பேசுகிறார்கள்.

சின்ன வயசில் இருந்தே அவள் கொழுகொழுனு இருப்பாள். இந்த மாதிரி நிறைய கிண்டல், கேலிகளை அவள் எதிர்கொண்டிருக்கிறார்.எந்த நடனத்திற்கு எந்த மாதிரி டிரஸ் போட வேண்டும் என்ற அறிவெல்லாம் எங்களுக்கு உள்ளது. சீரியலில் நடிக்கப்போன பிறகு அங்க அவர்கள் சொல்வதைதான் கேட்க முடியும். ஒரு வேளை இப்படி காட்டினால்தான் சீரியலில் ரேட்டிங் ஏறும் என நினைக்கிறார்களா? என்று தெரியவில்லை என காட்டமாக கூறியுள்ளார்.

 

இதையும் படிங்க: 90'ஸ் கிட்ஸுக்கு சூப்பர் அப்டேட்.. அப்பாஸ் மீண்டும் என்ட்ரி.. எந்த படத்தில் தெரியுமா.?!