படையப்பா படத்தின் மொத்த வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா.? அடித்து நொறுக்கிய பாக்ஸ் ஆபிஸ்!!Padayappa movie box office vasool

பிரபல இயக்குனரான கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக் பாஸ்டர் அடித்த திரைப்படம் தான் படையப்பா. இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மறைந்த நடிகை சௌந்தர்யா நடித்துள்ளார்.

படையப்பா படத்தில் ரஜினிக்கு நிகராக நடித்த ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி கதாபாத்திரம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் செந்தில், ராதாரவி, லட்சுமி, நாசர், மணிவண்ணன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். 

இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் இதுவரை 58 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த படம் வெளிநாட்டில் மட்டும் 10 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.