ஆமாம் எனக்கு அந்த பழக்கம் உள்ளது!! ஓப்பனாக பேசிய நடிகை ஓவியா!!

ஆமாம் எனக்கு அந்த பழக்கம் உள்ளது!! ஓப்பனாக பேசிய நடிகை ஓவியா!!


oviya talking about her habit

களவாணி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனவர் நடிகை ஓவியா. இந்த படத்திற்கு பிறகு இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கூடியது. முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றநிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் ஓவியா. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

அதன்பிறகு அதிக வாய்ப்பு இல்லாமல் இருந்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆரம்ப முதல் இவரது பேச்சு, நடவடிக்கை , டான்ஸ் போன்றவற்றால் ரசிகர்கள் குவிந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா ஆர்மி அமைத்து ஓவியாவை கொண்டாடினார்கள் ரசிகர்கள்.ஓவியா வெளிப்படையாக பேசக்கூடியவர், குழந்தைதனம் கொண்டவர் என்பதால் தான் பலர் அவருக்கு ரசிகர்களாக மாறி ஓவியா ஆர்மியெல்லாம் துவங்கினர்.

அனிதா உதீப் எனும் பெண் இயக்குநர் இயக்கத்தில், ஓவியா நடித்திருக்கும் படம் 90 எம்.எல். இந்தப் படத்துக்கு சிம்பு இசையமைத்திருப்பதுடன், ஒரு காட்சியில் நடித்தும் இருக்கிறார். இந்த படம் மார்ச் 1 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவிருக்கிறது.

oviya

மேலும் இப்பட முன்னோட்டம் வெளியானதிலிருந்து ஓவியா மீது கடும் விமர்சனங்கள் வருகின்றன. அதைப்பற்றி எதனையும் கண்டுகொள்ளாத  ஓவியா, இந்தப்படத்தில் மாடர்னாக நடித்திருக்கிறேன், பெண்கள் என்றாலே அழுது கொண்டு சோக வசனம் பேசி தான் நடிக்க வேண்டுமா?  நான் ஒன்றும் நிர்வாணமாக நடிக்கவில்லை.... கற்பழிக்கும் காட்சியில் நடிக்கவில்லை.... ரசிகர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்களோ, அதைக் கொடுப்பது மட்டுமே என் கடமை என கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பும் பின்பும் எனக்குப் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. ஆனால் அதனால் வரும் விளைவு தெரிந்து அந்த பழக்கத்தில் இருந்து வெளியே வந்துவிட்டேன் என கூறினார்.