சினிமா

பிரபல நடிகரை காதலித்தீர்களா? நடிகை தமன்னா ஓபன் டாக்.

Summary:

தமனா open talk

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. மாடலிங் துறையில் பிரபலமான இவர் கேடி திரைப்படம் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை தமன்னா.

கல்லூரி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம். அதன்பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிலில் வெளிவந்த படிக்காதவன், அயன், சுறா போன்ற பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருந்தார் தமன்னா.

அதன் பிறகு கார்த்தியுடன் தொடர்ந்து பையா மற்றும் சிறுத்தை படத்தில் நடித்ததன் மூலம் கார்த்தியுடன் காதலில் விழுந்தார் என்ற சிசு சிசு கிளப்பினர். அதற்கு தற்போது தெலுங்கு மீடியா ஒன்றிற்கு பதிலளித்துள்ளார். 

தமன்னா கூறியதாவது, கார்த்தி எனக்கு வெறும் சக நடிகர் மட்டுமே. மற்றபடி அவருடன் நான் நட்பு ரீதியாக கூட நெருங்கிப் பழகியதில்லை.

நான் காதலில் விழுந்தால் அதை மறைக்காமல் அனைவரிடமும் பகிர்ந்துகொள்வேன் என்று தமன்னா பேசியுள்ளார்


Advertisement