கொரோனாவை தடுக்க போராடுபவர்களுக்காக, மக்களின் மன அழுத்தத்தை போக்க ஆன்லைன் இசைநிகழ்ச்சி! எப்போ தெரியுமா?

கொரோனாவை தடுக்க போராடுபவர்களுக்காக, மக்களின் மன அழுத்தத்தை போக்க ஆன்லைன் இசைநிகழ்ச்சி! எப்போ தெரியுமா?


Online music show sangeetha kethu announced

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவிய நிலையில், 7000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் யாரும் வீட்டைவிட்டு அத்தியாவசிய தேவைகளின்றி வெளியேறக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா பரவுவதை தடுக்க மருத்துவர்கள், காவலர்கள்,  தூய்மைப் பணியாளர்கள் பலரும் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் தீவிரமாக போராடி வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்காகவும், வீட்டுக்குள்ளேயே இருக்கும் மக்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும் சங்கீத கேது என்ற இசை நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக இந்திய பாடகர்கள் உரிமை கூட்டமைப்பு இஸ்ரா அறிவித்துள்ளது.

music show

மேலும் இதில் இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், லதா மங்கேஷ்கர், ஹரிஹரன், ஷங்கர் மகாதேவன், ஆஷா போஸ்லே, உதித் நாராயணன், ஷான், பங்கஜ் உதாஸ், சோனு நிகம் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி பாடகர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பாடஉள்ளனர். மேலும் இந்த இசை நிகழ்ச்சி ஏப்ரல் 9,10,11 ஆகிய 3 நாட்கள் இரவு 9 மணிக்கு நடைபெறவுள்ளது.