சினிமா

ஓணம் பண்டிகை ஸ்பெஷலாக ரசிகர்களை குஷிப்படுத்த வெளியாகும் மூன்று திரைப்படங்கள்.!

Summary:

onam special release movie

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி நாளுக்குநாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் திரையரங்குகள் மூடப்பட்டு படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் ரிலீசுக்கு தயாராக உள்ள சில படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவருகின்றன. 

எந்த பண்டிகைகள் வந்தாலும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக காத்திருப்பது முக்கிய நடிகர்களின் திரைப்படங்கள் தான். பல முக்கிய நடிகர்களின் படங்கள் வெளியிட தயாராக இருந்தாலும் எதாவது பண்டிகைக்காக காத்திருப்பார்கள். ஆனால் கொரோனாவால் திரையரங்குகள் மூடிக் கிடக்கும் இன்றைய சூழலில், ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளனர்.

இந்தநிலையில், ஓணம் பண்டிகையை கொண்டாடும் வகையில் மூன்று படங்களை வெளியிடுகின்றன ஓடிடி தளங்கள். தற்போது அமேசான் ப்ரைம், நெட்பிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட் ஸ்டார் என ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக் கொண்டு பல மொழிகளிலும் திரைப்படங்களை வெளியிட்டு வருகின்றன. 

அந்தவகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு "சி யூ சூன்", "மணியாறாயில் அசோகன் அசோகன்", கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ் ஆகிய மூன்று மலையாள திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. பகத் பாசில், ரோஷன் மேத்யூ, தர்ஷனா ஆகியோர் நடித்திருக்கும் "சி யூ சூன்" படம் அமேசான் பிரைமில் செப்டம்பர் 1-ம் தேதி வெளியாகிறது. கிலோமீட்டர்ஸ் & கிலோமீட்டர்ஸ் திரைப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வருகிற 31-ம் தேதி வெளியாகவுள்ளது. அனுபமா பரமேஸ்வரன், கிருஷ்ண ஷங்கர் நடித்துள்ள 'மணியாறாயில் அசோகன்' திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வருகிற 31-ம் தேதி வெளியாகவுள்ளது.


Advertisement