சினிமா Deepavali 2019

பிகில்: எதிர்ப்பார்ப்பில் இருந்த தளபதி ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் நியூஸ்!

Summary:

No special show for bigil movie

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாக உள்ளது. விளையாட்டை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

இந்நிலையில் படத்திற்கான முன்பதிவு தொடங்கி வியாபாரம் கலைகட்டி வருகிறது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகிறது என்றால் ஸ்பெஷல் ஷோக்களுக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள்.

தற்போது பிகில் படத்திற்கும் ஸ்பெஷல் காட்சிகள் ஒளிபரப்பாகும் என காத்திருந்த ரசிகர்ளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக பிகில் உட்பட அக்டோபர் 25 அன்று வெளியாகும் எந்த படத்திற்கும் ஸ்பெஷல்  காட்சிகள் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.


Advertisement