பார்வையால் ரசிகர்களை பரவசப்படுத்திய கேப்டன் மில்லர் நடிகை; அசத்தல் கிளிக்ஸ் உள்ளே.!
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான படங்களில் நடித்து கவனத்தை பெற்ற இந்திய நடிகை நிவேதிதா சதிஷ் (Nivedhithaa Sathish). இவர் தமிழில் வெளியான சில்லு கருப்பட்டி, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வரவேற்பையும் பெற்றார்.
கடந்த 2017ம் ஆண்டு வெளியான மகளிர் மட்டும் திரைப்படத்தில் நடித்து திரைவாழ்க்கையை தொடங்கிய நிவேதிதா ஹெலோ, உடன்பிறப்பே ஆகிய படத்திலும் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நடிகை, சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. வெள்ளை நிற ஆடையில், மயக்க வைக்கும் பார்வையுடன் அவர் தோன்றியுள்ளது ரசிகர்களை பரவசமடைய வைத்துள்ளது.