சினிமா

ஊரடங்கில் தனது காதலியை கரம்பிடித்தார் பிரபல இளம்நடிகர்! வைரலாகும் அழகிய திருமணப் புகைப்படங்கள்!

Summary:

Nikil siddharth married with pallavi sharma

தெலுங்கு சினிமாவில் ஹாப்பி டேஸ், கிர்க் பார்டி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் நிகில் சித்தார்த். அதனைத் தொடர்ந்து அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் நிகில் சித்தார்த் கடந்த சில ஆண்டுகளாக பல்லவி வர்மா என்ற மருத்துவரை காதலித்து வந்தார். 

இவர்கள் இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. மேலும் அவர்களது திருமணம்  ஏப்ரல் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் திருமணம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தொடர்ந்து வந்த நிலையில் திருமணத்தை உடனே நடத்த முடிவுசெய்யப்பட்டு  இன்று ஹைதராபாத்தில் உள்ள நிகிலின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. 

இந்தத் திருமணத்தில் இருவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். 
மேலும் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு முகக்கவசமும், சானிடைசரும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஜோடிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். மேலும் ஊரடங்கு முடிந்து சகஜ நிலைக்கு திரும்பிய பிறகு திருமண வரவேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது. 


Advertisement