என்ஜிகே தெறிக்கவிடும் வசூல்! வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ள சூர்யா.!

என்ஜிகே தெறிக்கவிடும் வசூல்! வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ள சூர்யா.!



ngk - chennai box of hits - history of surya movie

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பிற்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் இவர் சினிமா மற்றும் இன்றி பல பொதுநல செயல்களிலும் சமுதாய நலன் கருதி ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் என்ஜிகே. இப்படத்தை டி. ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர் பிரபு ஆகியோரின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் சூர்யாவுடன் ராகுல் பிரீத்சிங், சாய்பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 

கடந்த 31ம் தேதி வெளியான இப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் ஹிட் கொடுத்துள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.1.03 கோடி, 2ம் நாள் முடிவில் ரூ.1.07 கோடி மேலும், 3ம் நாள் முடிவில் ரூ.0.97 கோடி வரையிலும் வசூல் குவித்துள்ளது. 



 

ஒட்டு மொத்தமாக 3ம் நாட்கள் முடிவில் சூர்யாவின் என்ஜிகே ரூ.3.07 கோடி வசூல் கொடுத்து புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. 3 நாட்கள் முடிவில் சூர்யாவின் ஒரு படம் ரூ.3 கோடிக்கும் அதிகமாக வசூல் குவிப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. 



 

இந்த ஆண்டில் வெளியான படங்களில் சென்னை சிட்டி ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் என் ஜி கே படம் 3ஆவது இடம் பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக வந்த ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் என்ட்கேம் மற்றும் ரஜினிகாந்தின் பேட்ட ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.