"விஜயை போல நானும் அரசியலுக்கு வருவேன்" அடம் பிடிக்கும் விஷால்.! வைரலாகும் பதிவு.!?News about Actor vishal political entry

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் விஷால். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். ஆக்சன் ஹீரோவாக தனது நடிப்பு திறமையை நிலைநாட்டிய விஷால், தனக்கென தனி இடத்தை தமிழ் திரை துறையில் நிலைநாட்டியுள்ளார். முதன் முதலில் செல்லமே திரைப்படத்தின் மூலம் தனது அட்டகாசமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருந்தார் விஷால்.

vishal

இதன் பிறகு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வெற்றி திரைப்படங்களை அளித்துள்ளார். ஆனால் சமீப காலமாக இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியை அடைந்தன. இதன் பிறகு சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்தது. ஆனால் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் எஸ் ஜே சூர்யா தான் என்று ரசிகர்கள் பலரும் கருதி வருகின்றனர்.

இப்படத்திற்குப் பின்பு தற்போது ஹரி இயக்கத்தில் 'ரத்னம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு சினிமாவில் பிஸியான நடிகராக இருந்து வரும் விஷால் அரசியலிலும் கால் பதிக்கும் முயற்சியில் மக்களுக்கு பல உதவிகளையும் அடிக்கடி செய்து வருகிறார். சமீபத்தில் தூத்துக்குடி மக்களுக்கு தண்ணீர் குழாய் அமைத்துக் கொடுத்தது மிகப்பெரும் செய்தியாக பேசப்பட்டு வந்தது.

vishal

இது போன்ற நிலையில், தற்போது சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்த விஷால், தனது அரசியல் ஆசையை குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கை இணையத்தில் வைரலாகி விஷால் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் விஜய்க்கு போட்டியாக தான் விஷால் அரசியலில் ஈடுபட உள்ளார். என்று பலரும் பலவிதமாக கருத்து கூறி வருகின்றனர்.