சினிமா

தன் உடம்பில் பிட்டு துணி இல்லாமல் தவிக்கும் அமலாபால்; வைரலாகும் ஆடை படத்தின் டீசர்.!

Summary:

new tamil movie - aadai - amala paul without tress - vairal teaser

அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல்ல வசூல் படைத்தன  . தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். ஆடை படத்தில் அறைகுறை உடையில் இருப்பதுபோன்ற பாஸ்ட் லுக்  புகைப்படம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடித்ததில்லை  என்று பேசினார்கள். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது எனக்கு மிகவும் பிடித்திருத்தது. மேலும் இது எனக்கு ஒரு புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.

தொடர்புடைய படம்

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ஆடை. பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில், அமலா பால் உடன் இணைந்து பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா ஆகியோர் பலர் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஆனால், சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. ஏனென்றால், இந்த டீசரில், அமலா பால் ஆடையில்லாமல் நடித்திருக்கும் காட்சி அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டீஸர் வெளியீட்டிற்கு முன்பாக படக்குழு  படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். U அல்லது U/Aசான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதால் U அல்லது U /A சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக A சான்றிதழ் அளிக்க முடிவு செய்து  உள்ளனர்.


Advertisement