புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அப்பா மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டில் சுற்றி திரியும் விஜயகாந்தின் மகன்.. திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்.!
தமிழ் திரைத்துறையில் 90களின் காலகட்டங்களில் ஆரம்பித்து பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருப்பவர் விஜயகாந்த். இவரின் நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டங்கள் இன்று வரை இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிப்பில் மட்டுமல்லாது அரசியலிலும் தனது காலை பதித்து பல்வேறு மக்களுக்கு உதவி செய்து வந்தவர் விஜயகாந்த். இவ்வாறு திரைத்துறையிலும், பொதுமக்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வந்ததால் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
சமீபத்தில் விஜயகாந்தின் உடல் மிகவும் மோசமாகி நோய் பாதிக்கப்பட்டு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல திரைத்துறை பிரபலங்களும் பொதுமக்களும் நலம் விசாரித்தனர். ஆனால் விஜயகாந்தின் மகன் தற்போது இணையத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்பா மீது அக்கறை இல்லாமல் வெளிநாட்டில் சுற்றி வருகிறீர்களா என்று திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர்.