திருமணநாள் கொண்டாடுற லட்சணமா இது.! வீடியோவால் எழுந்த சர்ச்சை! விமர்சித்தவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதிலடி!!

திருமணநாள் கொண்டாடுற லட்சணமா இது.! வீடியோவால் எழுந்த சர்ச்சை! விமர்சித்தவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கொடுத்த பதிலடி!!


Netizan badly comment to lakshmi ramakrishnan weddind day celebration video

தமிழ் சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். 

அவர் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்தும், பிரபலங்களின் சர்ச்சை பிரச்சனைகள் குறித்தும் கருத்து தெரிவித்து பதிவுகளை வெளியிடுவார். அதுமட்டுமின்றி அடிக்கடி தனது புகைப்படங்களையும் வெளியிடுவார். இந்நிலையில் அண்மையில் லட்சுமி ராமகிருஷ்ணன் தன் திருமண நாளை கொண்டாடிய வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கணவருடன் காரில் பயணம், கடற்கரை செல்வது ஆகியவை இருந்தது. மேலும் திருமணம் குறித்தும் கணவரை குறித்தும் அவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்து கூறியுள்ளனர். ஆனால் சிலர் அவர் நெற்றியில் பொட்டு வைக்காததை குறிப்பிட்டு, அமங்கலமா, குங்கும பொட்டு வைக்காமல் போறீங்களே, இந்த அழகுல ஆத்துக்காரர் பக்கத்துல உயிரோட இருக்கார். வெட்டிங் டே கொண்டாடுற லட்சணம்! கேவலம்! என மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.  அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனும் உங்களைப் போன்றவர்களிடம் பெரியார் மிகக் கடுமையான, கொச்சையான மொழிகளை பயன்படுத்தியதில் ஆச்சரியமில்லை. ஆனாலும் நீங்கள் சீரழிந்து கொண்டுதான் இருக்கிறீர்கள் என பதிலடி கொடுத்துள்ளார்.

Lakshmi ramakrishnan