சினிமா

வித்தியாசமான தோற்றத்திற்கு மாறிய நடிகை நஸ்ரியா! காரணம் என்ன தெரியுமா?

Summary:

Nazriya newlook

தமிழ் சினிமாவில் முதன் முதலில் நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. அதனை தொடர்ந்து ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

நடிகை நஸ்ரியா சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகினார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் சேர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது வித்தியாசமான ஒன்றை செய்ய வேண்டும் என்பதற்காக குட்டையாக முடி வெட்டி போஸ் கொடுத்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை என பதிவிட்டுள்ளார்.


Advertisement