சினிமா

ரயில் படிக்கட்டில் நின்று குத்தாட்டம் போடும் நடிகை நஸ்ரியா! வைரலாகும் வீடியோ

Summary:

Nazria dancing near train steps

நேரம் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நஸ்ரியா, ராஜா ராணி படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். அவர் பேசிய பிரதர் என்னும் வார்த்தை ரசிகர்கள் மத்தியில் ரொம்ப வரவேற்பை பெற்றது. 

அதனைத் தொடர்ந்து நையாண்டி, ஜெய்யுடன் திருமணம் எனும் நிக்கா திரைப்படத்தில் நடித்தார். கொஞ்சம் படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு தமிழில் ரசிகர்கள் அதிகம்.

பிறகு சில மலையாளப்படங்களில் நடித்த நஸ்ரியா நடிகர் ஃபகத் ஃபாஸிலை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். இப்போது அவர் சதுரங்க வேட்டை புகழ் இயக்குனர் எச்.வினோத் அஜித்தை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நஸ்ரியா சமீபத்தில் ரயிலில் பயணம் செய்த போது படிகட்டில் நின்று ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 


Advertisement