தெலுங்கிலும் பிரபலமாகும் நயன்தாரா! தெலுங்கில் வெளியாகிறது தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற படம்

தெலுங்கிலும் பிரபலமாகும் நயன்தாரா! தெலுங்கில் வெளியாகிறது தமிழில் மாபெரும் வெற்றிபெற்ற படம்


nayantharas-imaikka-nodikal-releases-in-telungu

நயன்தாரா நடித்து ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த படம் இமைக்க நொடிகள். இந்தி நடிகர் அனுராக் காஷ்யாப். அதர்வா, ராசி கன்னா போன்றோர் நடித்திருந்த இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

வித்தியாசமான திரில்லர் கதைக்களத்தால் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த இப்படம் வசூலிலும  நல்ல தொகையினை ஈட்டியிருந்தது.

ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸாகியிருந்த இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 20 கோடிக்கும் மேலாக வருவாயை பெற்றுள்ளது. நயன்தாராவின் நடிப்பு இந்த படத்தில் அவருக்கு நல்ல மதிப்பையும் அவருக்கென பல ரசிகர்களையும் பெற்று வருகிறது.

nayanthara

இந்நிலையில் வரலாற்று கதை பின்னணியில் தெலுங்கில் உருவாகி வரும் சாய் நரசிம்ம ரெட்டி திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் நயன்தாராவும் நடித்திருப்பதால் மூலம் அவருக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் ஆதரவு பெருக துவங்கியுள்ளது. இந்த சமயத்தில் இமைக்கா நொடிகள் படத்தை பற்றிய புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழில் நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படமான இமைக்கா நொடிகள் படத்தை தெலுங்கிலும் மொழிபெயர்த்து வெளியாக உள்ளது. வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.