சினிமா

பல பிரபலங்களுடன் ஒரே நேரத்தில் நயன்தாரா! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

nayanthara with celebraties for diwalli

சொந்த வாழ்க்கையில் பல சோதனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் தாண்டி இன்று திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது படங்கள் சமீபகாலமாக தொடர் வெற்றியை பெற்று வருகின்றன. 

தற்போது இவர் நடிகர் அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜேஷ் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதைத் தொடர்ந்து தனது 63-வது படமான ஐரா படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். 

இந்த தீபாவளிக்கு தனது படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் திரைத்துறையிலிருக்கும் தனது நெருக்கமான நண்பர்களுடன் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இதில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லி, கோலமாவு கோகிலா படத்தின் இயக்குநர் அட்லி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். வெடிச் சத்தமில்லாமல் நடந்த இந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Advertisement