அட செம... நயன்தாரா - விக்னேஷ் சிவன் மகன்களின் முழு பெயர் என்ன தெரியுமா.?

அட செம... நயன்தாரா - விக்னேஷ் சிவன் மகன்களின் முழு பெயர் என்ன தெரியுமா.?



Nayanthara Vignesh Sivan couple announced sons full name

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் பிரபல இயக்குனரான விக்னேஷ் சிவன் என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஆண்டு மிக பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். திருமணமான சில நாட்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டனர்.

இது மிக பெரிய சர்ச்சையாக பேசப்பட்டு வந்த நிலையில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதியினர் எங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் நடைபெற்று விட்டதாக விளக்கம் அளித்தனர். இந்நிலையில் தற்போது தனது மகன்களின் பெயர்களை நயன்தாரா அறிவித்து உள்ளார்.

nayanthara

சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நயன்தாரா தனது மகன்களின் முழு பெயரையும் மேடையில் கூறியுள்ளார். அதாவது தனது இரண்டு மகன்களுக்கும் உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் என பெயர் வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.