சினிமா

அச்சோ.. என்ன இப்படி ஆகிட்டீங்களே! என்னாச்சு உங்களுக்கு! நயன்தாராவின் புகைப்படத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

அச்சோ.. என்ன இப்படி ஆகிட்டீங்களே! என்னாச்சு உங்களுக்கு! நயன்தாராவின் புகைப்படத்தால் செம ஷாக்கான ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக, லேடி சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகை நயன்தாரா. அண்மையில் நடிகர் ரஜினியுடன் இணைந்து இவர் நடித்திருந்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் அவருடன் விஜய் சேதுபதி மற்றும் சமந்தாவும் இணைந்து நடித்துள்ளனர். ஆரம்பத்தில் கொழுகொழுவெண இருந்த நயன்தாரா தற்போது உடல் எடையை நன்கு குறைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் நகைக்கடை விளம்பரத்துக்காக போஸ் கொடுத்த புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைக் கண்ட ரசிகர்கள் செம ஷாக்காகி என்ன இப்படி எலும்பும் தோலுமாக ஆகிட்டீங்களே, உங்களுக்கு என்னதான் ஆச்சு என அக்கறையுடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


Advertisement