சினிமா

விஸ்வாசமான ரசிகர்களுக்கு விஸ்வாசம் படத்தின் நாயகியின் நன்றி!

Summary:

Nayanthara thanks thala fans for 10 million views

நேற்று வெளியான விசுவாசம் படத்தின் ட்ரைலர் 10 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றது. இதற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்த படத்தின் கதாநாயகி நயன்தாரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் பொங்கல் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள படம் விஸ்வாசம். வீரம், வேதாளம், விவேகம் படத்தை தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் கூட்டணி அமைத்துள்ளார் சிவா. படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஆக்‌ஷன், காமெடி, சென்டிமென்ட் என சகல அம்சங்களுடன் வெளியாகவுள்ள விஸ்வாசம் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது . ட்ரெய்லர் வெளியானது முதல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுவரை 12 மில்லியன் பார்வையாளர்களை தாண்டிச் சென்றுள்ளது விஸ்வாசம் ட்ரைலர். மேலும் #SuperThalaAndNayanFans என்ற ஹேஷ் ட்க் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. 

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் டிரைலருக்கு அமோக வரவேற்பு கொடுத்துள்ள ரசிகர்களுக்கு அந்த படத்தின் கதாநாயகி நயன்தாரா “விசுவாசமான ரசிகர்களை நிறுத்தவே முடியாது. குறைவான நேரத்தில் ட்ரைலரை பார்த்த 10 மில்லியன் பார்வையாளர்களுக்கும் நன்றி" என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


Advertisement