சினிமா

புத்தாண்டு தினத்தை நயன்தாரா எங்கு, யாருடன் கொண்டாடியுள்ளார் தெரியுமா? வெளியான புகைப்படங்கள்

Summary:

nayanthara new year celebration at las vegas

நடிகை நயன்தாரா இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை அமெரிக்காவில் லாஸ்வேகாஸ் நகரில் தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்கள் நயன்தாரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் இன்று அசைக்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய சூழ்நிலையில் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கொண்டுள்ள ஒரே நடிகை நயன்தாரா தான். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் மாபெரும் வெற்றியை பெற்றன.

வரும் பொங்கலுக்கு தல அஜித்துடன் இவர் இணைந்து நடித்திருக்கும் விஸ்வாசம் திரைப்படம் வெளியாக உள்ளது. இது அஜித் மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிராமத்து உடையில் வெளியாகும் நயன்தாராவின் புகைப்படங்கள் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது.

நயன்தாரா தன்னுடைய சொந்த வாழ்க்கையில் எவ்வளவு இன்னல்களை சந்தித்தாலும் ஒவ்வொரு விழாக்களையும் அவர் மிகவும் சிறப்பாக கொண்டாடி வருபவர். தனக்கென ஒரு புதுவிதமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர் நயன்தாரா.

இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தை நயன்தாரா தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கொண்டாடியுள்ளார். அப்போது விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நயன்தாரா பதிவிட்டுள்ளார்.

 


Advertisement