என்னது! சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா இந்த வேலைதான் பார்த்தாரா! வைரலாகும் ஷாக் வீடியோ ! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

என்னது! சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு நடிகை நயன்தாரா இந்த வேலைதான் பார்த்தாரா! வைரலாகும் ஷாக் வீடியோ !

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பார்ப்பவர் நயன்தாரா. தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர்  ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் . இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

நடிகை நயன்தாரா தன்மீது  பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல், தனது கடின உழைப்பால் புகழின் உச்சத்தில் உள்ளார். மேலும் சமீப காலமாக ஹீரோக்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துவந்த நயன்தாரா தற்போது மீண்டும் மாஸ் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். 

தொடர்புடைய படம்

மேலும் அவரது நடிப்பில் பிகில் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து  ரஜினியுடன் இணைந்து தர்பார் படத்திலும் நடித்துள்ளார்.இவ்வாறு லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலித்து வரும் நயன்தாரா சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு துவக்கத்தில் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றியுள்ளார்.அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo