நடிகர் மனோஜின் மனைவியும் ஹீரோயினா?? அவரோட அழகான குடும்பத்தை பார்த்தீங்களா!!
இதுவரைக்கும் நான் யார்கிட்டையும் சொன்னது இல்ல..!! விஜய் டிவியில் கதறி அழுத நயன்தாரா!! ஆறுதல்படுத்திய டிடி!! ரசிகர்கள் அதிர்ச்சி..

தனது தந்தை குறித்து பேசிய நயன்தாரா விஜய் டிவி நிகழ்ச்சியில் கண்கலங்கிய காட்சிகள் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் நேற்று முன்தினம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்கா "லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா" என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் நயன்தாரா கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி இன்று காலை 10 . 30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி தொகுப்பாளினி டிடி தொகுத்துவழங்கினார். நிகழ்ச்சியில் அடுக்கடுக்கான கேள்விகளை நயன்தாராவிடம் கேட்ட டிடி, கடைசியாக உங்களுக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்து நீங்கள் வாழ்க்கையின் பின்னோக்கி சென்றால் நீங்கள் எதை மாற்றுவீர்கள் என்று நயன்தாராவிடம் கேட்டார்.
இதற்கு பதிலளித்த நயன்தாரா, இதை நான் யாரிடமும் கூறியதில்லை. கடந்த 13 ஆண்டுகளாக எனது தந்தை உடல்நல குறைவால் அவதிப்படுவருகிறார். தற்போது கூட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஒரு குழந்தையை போல் அவரை பார்த்துக்கொள்ளவேண்டி உள்ளது.
எனக்கு ஒரு டைம் மெஷின் கிடைத்தால், 13 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று எனது தந்தை முன்பு எப்படி இருந்தாரோ அதேபோல் அவரை மாற்றிவிடுவேன் என கூறி கண்கலங்கினார். மேடையில் இருந்தவர்களும் கண்கலங்க, உடனே டிடி எழுந்துவந்து நயன்தாராவை ஆறுதல்படுத்தினார்.